சேலம் ஆர்.ஆர்.பிரியாணிக் கடையில் வாங்கிய மட்டன் பிரியாணியில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஊழியர்களிடம் முறையிட்ட போது அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

சென்னை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர்களான விக்னேஷ், சுசிந்தர் பாலாஜி, கேபா ஆகியோர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உணவகத்தில் நேற்று மட்டன் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். இதில், ஒரு மட்டன் பிரியாணியில் புழு ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக 3 பேரும் கடை ஊழியரிடம் முறையிட்டுள்ளனர். அப்போதுது, கத்தரிக்காயில் இருந்து வந்து இருக்கும் புழுவை எடுத்து போட்டு விட்டு சாப்பிடுமாறு அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!
undefined
இதனை பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் பிரியாணியில் புழு இருந்த விஷயம் தெரியவரவே அவர்களும் சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- உணவுத் திருவிழாவில் ”பீப் பிரியாணி”.. சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு திடீர் அனுமதி