ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் பள்ளி மாணவியை கடத்த முயற்சி.. சினிமா பாணியில் கீழே குதித்து தப்பித்த மாணவி.!

By vinoth kumar  |  First Published Aug 9, 2022, 12:39 PM IST

சென்னையில் பட்டப்பகலில் பள்ளி மாணவியை ஷேர் ஆட்டோவில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையில் பட்டப்பகலில் பள்ளி மாணவியை ஷேர் ஆட்டோவில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த  மாணவி தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி வழக்கம் போல் பள்ளி செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே 25 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள்  திருவொற்றியூர் சுங்கசாவடியிருந்து தங்கசாலை செல்வதற்காக பயனித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- திமுக பிரமுகருக்கு சமாரி அரிவாள் வெட்டு.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

undefined

புதுவண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கியபோது மாணவியை அவர்கள் கைகுட்டை வைத்து வாயில் அடைக்க முயற்சி செய்தனர். அப்போது சுதாரித்துக் கொண்ட அந்த மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், மாணவியின் மூக்கு தாடை போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். 

இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி மாணவி கடத்த முயற்சித்த சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க;- பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.. கெத்து காட்டிய பெண் எஸ்.ஐ.,.!

click me!