பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட தலை.. வலி தாங்காமல் கதறி அழுது துடித்த ஒன்றரை வயது குழந்தை..

By Thanalakshmi VFirst Published Aug 19, 2022, 4:49 PM IST
Highlights

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கி கொண்ட நிலையில், தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே  கிளாக்குளத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவருக்கு வனிதா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் அஜித் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பழனிசாமி வீட்டிற்கு வெளியில் வேலை செய்துக்கொண்டிருக்க, மனைவி வனிதா சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது சமையல் அறையில் தரையில் இருந்த பாத்திரத்தை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அதில் தனது தலையை விட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை, பாத்திரத்தில் வசமாக சிக்கிக்கொண்டுள்ளது.  பாத்திரத்திலிருந்து தலை எடுக்க முடியாமால் குழந்தை அலறியுள்ளது.

மேலும் படிக்க:கூவத்தூரில் இபிஎஸ்க்கு முன் முதலமைச்சராக சசிகலா தேர்வு செய்தது இவரைத்தான்...! சையது கான் அதிரடி கருத்து

பதறி அடித்து ஓடி வந்த குழந்தையின் பெற்றோர், மாட்டிக்கொண்ட பாத்திரத்தை எடுக்க நீண்ட நேரம் போராடியும், அவர்களால எடுக்க முடியவில்லை. வலி தாங்க முடியாமல் குழந்தை துடிதுடித்து அழுதுள்ளது. இதனையடுத்து, பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் தலையை பாத்திரத்திலிருந்து தீயணைப்பு துறையினர் எடுக்க முடியவில்லை. அதனால், குழந்தையில் தலை மாட்டிக்கொண்ட பாத்திரத்தை வெட்டி எடுக்க முடிவு செய்தனர். 

அதன்படி சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்டிருந்த பாத்திரத்தை வெட்டி அகற்றினர்.பரமக்குடி தீயணைப்பு துறையினர் குழந்தையை  பத்திரமாக மீட்டனர்.  சிறு குழந்தை பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய தீயணைப்பு வீரர்கள், அழுதுகொண்டே இருந்த குழந்தையை தூக்கி  ஆசுவாசப்படுத்தினர்.

மேலும் படிக்க:சிக்கன் ப்ரைடு ரைஸில் உடைந்த கண்ணாடி துண்டு.. வசமாக சிக்கிய புகாரி ஹோட்டல்..!

click me!