சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..

Published : Jul 06, 2022, 10:14 AM IST
சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..

சுருக்கம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜ கோபுர குடமுழுக்கு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜ கோபுர குடமுழுக்கு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஜூலை 3 ஆம் தேதி வாஸ்து சாந்தி, தன பூஜையோடு குட முழுக்கு விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதி முதல் இன்று வரை நான்கு கால யாக வேள்வி பூஜையும், மஹாபூர் னா ஹைதியும் நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவ்யா ஹீ தி ஆகிய பூஜைகளும் நடைபெற்றன.

மேலும் படிக்க:418 ஆண்டுகளுக்கு பின் ஆதிகேசவ பெருமாள் கோவில் குடமுழுக்கு.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை..

யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு இராஜ கோபுர விமானத்திற்கு வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோபுர கலசங்களுக்கு காலை 7 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதில் அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத்துறை முதன்மை செயலாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க:ஆதிச்சநல்லூர் அகழாய்வு - முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள் கண்டுபிடிப்பு!

PREV
click me!

Recommended Stories

அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?
ஷாக்கிங் நியூஸ்! விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!