தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து நீலகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் படிக்க:LPG Gas Price: கலக்கத்தில் நடுத்தர மக்கள்.. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு..எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில் நேற்றிரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து நீலகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:418 ஆண்டுகளுக்கு பின் ஆதிகேசவ பெருமாள் கோவில் குடமுழுக்கு.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை..