LPG Gas Price: கலக்கத்தில் நடுத்தர மக்கள்.. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு..எவ்வளவு தெரியுமா?

By Thanalakshmi V  |  First Published Jul 6, 2022, 8:52 AM IST

சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. கடந்த மே மாதம் 1,015.50 ரூபாய் ஆகவும் மே 19 ல் ரூ10,18.50 ஆகவும் விலை உயர்ந்த நிலையில் தற்போது ஜூலை 6 ல் 10,68 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 


சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. கடந்த மே மாதம் 1,015.50 ரூபாய் ஆகவும் மே 19 ல் ரூ10,18.50 ஆகவும் விலை உயர்ந்த நிலையில் தற்போது ஜூலை 6 ல் 10,68 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றம், இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விலை மாற்றி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்… அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி!!

கடந்த மே மாதத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1000 ஐ கடந்தது. அதன்படி மே 7 ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,015 ஆக அதிகரித்தது. அந்த மாதத்திலே இரண்டாவது முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி, வீட்டு உபயோக விலை ரூ. 3 அதிகரித்து, 1,018 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று சிலிண்டர் விலை ரூ.50 ஆக உயர்ந்தப்பட்டது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 1,068. 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.தொடர் விலை உயர்வு காரணமாக நடுத்தர மற்றும் எழை, எளிய மக்கள் சிரமத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

மேலும் படிக்க:தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்..! ஆ.ராசாவிற்கு டஃப் கொடுக்கும் நயினார் நாகேந்திரன்

click me!