தமிழ் தேர்வில் 47 ஆயிரம் பேர் தோல்வி..! பள்ளிகளில் தமிழ் பாடவேளைகளை குறைக்க முடிவா..? அதிர்ச்சியில் ராமதாஸ்

By Ajmal Khan  |  First Published Jul 6, 2022, 10:02 AM IST

பள்ளிகளில் தமிழ் பாடவேளைகளை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


தமிழ் பாட வகுப்புகள் குறைப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் முழுமையாக செயல்படாத நிலை நீடித்து வந்தது. இதனையடுத்து நடப்பு கல்வி ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி முதல் இயல்பாக பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு  2022  முடிவுகளில் கடந்த மாதம் வெளியானது இதில் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்த மாணவர்களின்  எண்ணிக்கை 47 ஆயிரமாக உள்ளது சமூக ஆர்வலர்களிட்ம அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழ் பாட திட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது தமிழ் பாட வகுப்புகள் குறைக்கப்பட இருப்பதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. அதில்  ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாட வேளைகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன.வாரத்திற்கு 7 தமிழ், ஆங்கில பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 6ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல சமூக அறிவியல் பாடத்திலும் பாடவேளைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

Tap to resize

Latest Videos

LPG Gas Price: கலக்கத்தில் நடுத்தர மக்கள்.. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு..எவ்வளவு தெரியுமா?

மின்சார வாரியத்தின் ஆட்சேர்ப்பு பற்றிய அறிவிப்பாணை ரத்து… அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!!

தமிழுக்கு அவமரியாதை

இவற்றிற்குப் பதிலாக நீதி போதனை, நூலக வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 - 10 வகுப்புகளுக்கான தமிழ்  மொழிப் பாடத்திற்கான  பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த முடிவு மிகவும் தவறானதாகும்! வாரத்திற்கு ஒரு பாடவேளை நீதிபோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க, தேவையான  நடவடிக்கை.  அதற்காக ஆங்கில பாடவேளையை குறைத்ததுடன் நிறுத்தியிருக்கலாம்.  தமிழ் பாடவேளையையும் குறைத்திருக்கத் தேவையில்லை. அது தமிழுக்கு செய்யும் அவமரியாதை! எனவே, தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். முன்பிருந்தவாறே வாரத்திற்கு 7 பாடவேளைகளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை  மாணவர்களுக்கு வழங்க வேண்டும்! என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

மாணவர்களே கவனத்திற்கு.. மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் உத்தரவு
 

click me!