Salem : கடல் கடந்த காதல்..பிரான்ஸ் நாட்டு மணமகனை திருமணம் செய்த சேலத்து மணமகள் !

By Raghupati R  |  First Published Jun 28, 2022, 1:13 PM IST

Salem : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மணமகனின் குடும்பத்தினர், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து திருமணத்தில் பங்கேற்று அசத்தினர்.


சேலத்தில் திருமணம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி காசி படையாச்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர் பயிற்சியாளர் கந்தசாமி- சுகந்தி தம்பதியரின் மூத்த மகள் கிருத்திகா. பெண் பொறியாளரான இவர், சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வணிக மேம்பாட்டு துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

இவருக்கும் இவரோடு பணிபுரிந்த பிரான்ஸ் நாடு பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த பென்னடி - அட்மா ஊஜேடி தம்பதியரின் மகனான பொறியாளர் அசானே ஒச்சோயிட் என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதுகுறித்து பெண் பொறியாளர் கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றுள்ளார். ஆசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனர். 

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

இதையும் படிங்க : AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு

பாரம்பரிய முறையில் திருமணம்

பிரான்ஸ் நாட்டில் இருந்து மணமகனின் உறவினர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்திற்கு வந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பெண் அழைப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சேலம் ஐந்து ரோடு பகுதியிலுள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. தமிழர் பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் வேதம் ஓத, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக நடைபெற்றது இத்திருமணம்.

இதில் வாழப்பாடியைச் சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி, பிரான்ஸ் நாட்டிலிருந்து மணமகனின் உறவினர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்திருந்த பிரான்ஸ் நாட்டினர், தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை, சேலை, தங்க ஆபரணங்கள், தோடு ஜிமிக்கி கம்மல் அணிந்து திருமணத்தில் பங்கேற்று அனைவரையும் வியக்க வைத்தனர். தமிழர் உணவுகளான இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பார், சட்னி, இடியாப்பம் அல்வா ஆகியவற்றை, பிரான்ஸ் நாட்டினர் விரும்பி உண்டு மகிழ்ந்தனர். 

இதையும் படிங்க : AIADMK : முடங்கிய இரட்டை இலை சின்னம்.. கதறும் ர.ரக்கள் - உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சோகம் !

click me!