அடப்பாவிங்களா.. கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் ATM கார்டை திருடி ரூ.8.5 லட்சத்தை ஆட்டையை போட்ட ஊழியர்கள்.!

By vinoth kumarFirst Published Apr 8, 2022, 12:38 PM IST
Highlights

கோவை மாவட்டம் அவினாசி சாலை சிட்ரா பகுதியில் செயல்படும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் கடந்த மே மாதம் கோபியை சேர்ந்த யசோதா கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி யசோதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த யசோதாவின் கணவர் முருகசாமி சில தினங்களுக்கு முன்பு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க சென்றுள்ளார். 

கோவையில் கொரோனா சிகிச்சையின் போது உயிரிழந்த மூதாட்டியின் ஏ.டி.எம் கார்டை திருடி 8.5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொரோனாவால் உயிரிழப்பு

கோவை மாவட்டம் அவினாசி சாலை சிட்ரா பகுதியில் செயல்படும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் கடந்த மே மாதம் கோபியை சேர்ந்த யசோதா கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி யசோதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த யசோதாவின் கணவர் முருகசாமி சில தினங்களுக்கு முன்பு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க சென்றுள்ளார். 

ஏ.டி.எம் கார்டு திருட்டு

அப்போது, வங்கி கணக்கிலிருந்து ஏ.டி.எம் கார்டு மூலம் கடந்த மே மாதம் முதல் பல தவணைகளில் 8.5 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, பீளமேடு  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவமனையில் பணியாற்றிய அசாம் மாநில துப்புறவு தொழிலாளிகள் ராஜ் பெங்கான், அதுல்ஜோஷி ஆகியோர் ஏ.டி.எம் கார்டை திருடி கடந்த ஒரு வருடமாக பணம் எடுத்து வந்தது அம்பலமானது. 

ஊழியர் கைது

மேலும், ஏ.டி.எம் கார்ட்டின் பின்புறம் யசோதா பின் நம்பரை எழுதி வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!