ரூ.50 கோடி மதிப்பிலான கஞ்சா, போதை சாக்லேட்டுகள் பறிமுதல்! மாணவர்கள் வழியே இலங்கைக்கு கடத்தல்?

மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.50 கோடி மதிப்பிலான 10 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரி பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்திய சோதனைகளில் காரில் பின் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: Ration Card Holders: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி! செப்டம்பர் 5ம் தேதி வரை தான்!

Latest Videos

இது தொடர்பாக சர்வதே கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. கைதான நபர்கள் போதைப் பொருட்களை தென் மாவட்டங்களுக்க கொண்டு சென்று படகுகளில் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தாம்பரம் காவல் ஆணையரகத்தை சேர்ந்த 1000 போலீசார் பொத்தேரி பகுதிகள் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருக்கும் 500க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர். 

இதையும் படிங்க:  அதிகாலையில் பகீர்! பிரபல தனியார் கல்லூரியில் குவிந்த போலீஸ்! சோதனையில் சிக்கிய போதைப்பொருட்கள்! நடந்தது என்ன?

இதில் போதை சாக்லேட்டுகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 19 மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஒரு மாணவி உள்பட 11 கல்லூரி மாணவர்களை செங்கல்பட்டு நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது. இவர்களுக்கு போதைப் பொருள் விநியோகித்த மூவரை 15 நாட்கள் காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து போதை பொருள் கும்பல் குறித்து  வருவாய் புலனாய்வுத் துறையினரும், சென்னை மற்றும் தாம்பரம் போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

click me!