Ration Card Holders: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி! செப்டம்பர் 5ம் தேதி வரை தான்!
Ration Card Holders: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதம் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் செப்டம்பர் 5ம் தேதி வரை அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
Ration Shop
தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 34, 848 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.கடந்த சில மாதங்களாகவே தாமதமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தந்த மாதங்களில் சரியாக வழங்க முடியாத ரேஷன் பொருட்களை அடுத்த மாதம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் ஆகஸ்ட் மாதமும் வழக்கம்போல் ரேஷன் பொருட்கள் சரியாக கிடைக்காத நிலையில் பொதுமக்கள் தங்களது வேதனையை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நீயே என்ன விட்டு போயிட்ட! நான் இருந்து என்ன பண்ண போறேன்! காதலிக்காக உயிரை விட்ட காதலன்! நடந்தது என்ன?
இந்நிலையில், ரேஷன் கடைகளில்ஆகஸ்ட் மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவரை துவரம் பருப்பு, பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாக பயன்பெற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.