ஜெகத்ரட்சகனுக்கு விருது அறிவித்த திமுக.! எதுக்காக தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Sep 1, 2024, 11:40 AM IST

திமுக முப்பெரும் விழா வருகிற 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது,கலைஞர் விருது உள்ளிட்ட விருதுகளை பெறவுள்ளவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  


தமிழகத்தில் திமுகவின் வெற்றிகள்

பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியற்றை கருத்தில் கொண்டு திமுக சார்பாக ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் நடைபெறும்.  அந்த வகையில் இந்தாண்டும் மிகப்பெரிய அளிவில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.குறிப்பாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 3 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக சென்றுகொண்டுள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவை வீழ்த்து 40க்கு 40 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக சார்பாக பல கூட்டங்கள் பல மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இந்தநிலையில் திமுக சார்பாக முப்பெரும் விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

Tap to resize

Latest Videos

Vijay : ஒவ்வொரு தொகுதியிலும் 4 பேர் நியமனம்- விஜய் எடுத்த முக்கிய முடிவு

யாருக்கெல்லாம் விருது

இந்தநிலையில் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்காகவும் பாடுபட்டவர்களுக்காக திமுக சார்பாக விருது வழங்கப்படுகிறது.  இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் தி.மு.க. பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளுக்கான பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில்  பெரியார் விருது திருமதி.பாப்பம்மாள் அவர்களுக்கும், அண்ணா விருது  அறந்தாங்கி மிசா இராமநாதன் அவர்கட்கும், கலைஞர் விருது  எஸ். ஜெகத்ரட்சகன் அவர்கட்கு வழங்கப்படவுள்ளது.

பாப்பம்மாளுக்கு விருது

பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசன் அவர்கட்கும், பேராசிரியர் விருது  வி.பி. இராஜன் அவர்கட்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக  பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான 105 வயதான பாப்பம்மாளுக்கு திமுக முப்பெரும் விழாவில் 'பெரியார் விருது' வழங்கப்படவுள்ளது. 

click me!