அதிகாலையில் பகீர்! பிரபல தனியார் கல்லூரியில் குவிந்த போலீஸ்! சோதனையில் சிக்கிய போதைப்பொருட்கள்! நடந்தது என்ன?
பிரபல தனியார் கல்லூரி வளாகத்தில் திடீரென 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, ஆண்கள், பெண்கள் தங்கும் விடுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
Private college
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில், பொறியியல், மருத்துவம், டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் நைஜீரியா, மலேசியா, இந்தோனேசியா இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
Private Collge Students
இந்நிலையில், அதிகாலையிலேயே திடீரென இந்த கல்லூரி வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியே பரபரப்பானது. இதனையடுத்து தனியார் கல்லூரியில் சுற்றியுள்ள வீடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் அடுக்குமாடியில் குடியிருக்கும் நபர்கள் மற்றும் இருசக்கர வாகனம் வைத்திருந்தாலும் அதிலும் என்னென்ன வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
Private Hostels
மேலும் வெளி நபர்கள் உள்ளே செல்லும் போது அவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பாக சோதனை நடைபெறுகிறது. பெருமளவு கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் விடுதிகளில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Chennai Metro Announcement: சூப்பர் அறிவிப்பு! சென்னை மெட்ரோவில் இலவச பயணம்! ஆனால் ஒரு கண்டிஷன்!
Police Inspection
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில்சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ganja
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்தே இந்த விற்பனை நடைபெற்று வருகிறது. போலீசாரின் அதிரடி சோதனையில் கஞ்சா கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டாலும் ஓயவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.