டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை!! சென்னையில் நள்ளிரவில் 3 மணி நேரம் !! திருவாரூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!

By Selvanayagam PFirst Published Nov 2, 2018, 7:27 AM IST
Highlights

டெல்டா மாவட்டங்களான  திருச்சி, தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் நள்ளிரவில் 3 மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கொடுத்து ஓடியது. திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை  மாவட்டதங்களில்  இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் எனவும் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன்படி நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. சென்னையில் நேற்று இரவு 7 மணி முதலே கனமழை பெய்தது. இதையடுத்து நள்ளிரவில் 3 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது.

இதனையடுத்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் நாகை மாவட்டங்களில்  விடிய,விடிய பரவலாக மழை பெய்தது. மேலும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த மாவட்டங்களில் தொடர்ந்து தற்போது வரை பல இடங்களில் விடாமால் மழை பெய்து வருகிறது. இதையடுத்து திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!