வருது… வருது… நாளை வருது…! வானிலை ஆய்வு மையம் விடுத்த ‘அந்த’ அலர்ட்..

By manimegalai aFirst Published Sep 23, 2021, 7:32 PM IST
Highlights

தமிழகத்தில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் விடுத்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரே மழை மயம். திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையிலும் மழை கொட்டியது.

பல மாவட்டங்களில் திடீரென பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட வாகன ஓட்டிகள் கடும் அவஸ்தைக்கு ஆளானார்கள். கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாலை நேரம் பலத்த மழை கொட்டியது.

இந் நிலையில் வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வட கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் கூறி உள்ளது.

இந்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், தேனி, நாமக்கல், திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!