உஷார் மக்களே..! மீண்டும் கனமழை எச்சரிக்கை..!

By thenmozhi gFirst Published Nov 20, 2018, 2:43 PM IST
Highlights

கடந்த 15 ஆம் தேதி கஜா புயல் கரையை கடந்த போது நாகப்பட்டினம்,வேதாரண்யம் கடலூர் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புரட்டிபோட்டு விட்டது.
 

கடந்த15 ஆம் தேதி கஜா  புயல் கரையை கடந்த போது நாகப்பட்டினம்,வேதாரண்யம் கடலூர் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புரட்டிப்போட்டு விட்டது.

வீடுகள் மரங்கள், மின்சார கம்பங்கள் என அனைத்தும் பெரிதளவு பாதிப்படைந்து இன்றளவும் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது . இந்த நிலையில் தற்போது புதியதாக மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளத்தால் தமிழகத்திற்கு மீண்டும் மழை உள்ளது என சென்னை வானிகளை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி, தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் உள்ளது என்றும், காற்றழுத்த தாழ்வுநிலை நாளை வலுப்பெற்று தமிழக கடலோரம் நிலை கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வுப் மண்டலமாக மாறி கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால், இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமில்லாமல், காஞ்சி, விழுப்புரம், கடலூர் , திருவண்ணாமலை, நாகை, அரியலூர், புதுக்கோட்டை, காரைக்காலிலும் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்து உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் ஓரளவிற்கு மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டு உள்ளது.

இன்று காலை வேளையில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியா கோவளம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் மூன்று மணி நரம் கனமழை பெய்து உள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் லேசான சாரல் உள்ளது.

click me!