ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...! கடிதத்தில் எழுதிய "மனமுருகும் வார்த்தை"..!

By ezhil mozhiFirst Published Mar 20, 2019, 8:03 PM IST
Highlights

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சரவணனன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சரவணனன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருக்கும் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சரவணன் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

தற்போது ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முற்றிலும் மயங்கிய நிலையில் உள்ள  அவரை, அரசு மருத்துவமணியில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு  அழைத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தற்கொலை செய்துகொண்ட  இடத்தில் இருந்து ஒரு லெட்டர் கைப்பற்றப்பட்டது.

அதில்,"என்னுடையை தற்கொலைக்கு காரணம் யாரும் இல்லை... நான் இறந்தால் அதற்கின காப்பீட்டை வீட்டிற்கு வழங்கவும், இறந்தபின்னர் என்னை புதைத்தாலோ அல்லது எரித்தாலோ சீருடையை  கழட்டாமல் அப்படியே புதைக்க வேண்டும்.. இது தான் என்னுடைய கடைசி ஆசை என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஆயுத படை போலீசார் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அவ்வப்போது நடந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என விசாரிக்கும் போது அதிக பணிச்சுமை தான் காரணம் என முன்பு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது தற்கொலை செய்துகொண்ட சரவணனுக்கு இதே போன்ற பணிச்சுமை தான் காரணமா..? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்ற பல கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

click me!