காலையிலேயே அலறிய மதுரை.! கொலையாளியை சுட்டு பிடித்த போலீஸ்

மதுரையில் காவலர் கொலை வழக்கில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். பணத்திற்காக ஏற்பட்ட மோதலில் காவலர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Police arrest accused in Madurai police constable murder case KAK

Police encounter in Madurai : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க டிஜிபி உத்தரவிட்டிருந்தார். இதன் காரணமாக தப்பி ஓடி தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் காவலர் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை துப்பாக்கியால் போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மலையரசன் (36), இவர் தனிப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையரசனின் மனைவி பாண்டிச்செல்லி விபத்தில் உயிரிழ்ந்தார்.

Latest Videos

சினிமாவை மிஞ்சும் பயங்கரம்! மதுரையில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! யார் இந்த காளீஸ்வரன்?

காவலர் மர்ம மரணம்

இதனால் கவலையில் இருந்த காவலர் மலையரசன், பணிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக மரையரசனை காணவில்லையென அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே மதுரை விமான நிலையம் அருகே எரியூட்டப்பட்ட நிலையில் ஒரு உடல் கிடந்துள்ளது. அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில் காவலர் மலையரசன் என்பது தெரியவந்தது.  இதனையடுத்து மலையரசன் கொலை செய்யப்பட்டாரா.? தற்கொலையா.? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்த வழக்கு தொடர்பாக காவலர் மலையரசனோடு தொடர்பில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தர் தான் கொலை செய்தது தெரியவந்தது. 

காவலர் எரித்து கொலை

இதனையடுத்து தலைமைறைவாக இருந்த மூவேந்தரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இன்று காலை ஆட்டோ ஓட்டுநர் மூவேந்தரை கைது செய்ய முயன்ற போது சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பிவிடும் என்ற போது மூவேந்தரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணையில் கூறுகையில், காவலர் மலையரசனுக்கும் - ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரனுக்கும் இடையே ஆட்டோ சவாரி செல்வதின் மூலம்  நட்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது. இந்த நிலையில் இரண்டு பேரும்  சம்பவம் நடந்த அன்று பெருங்குடி அருகே பைபாஸ் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்தியதாக தெரியவந்துள்ளது.

வேகமாக பைக் ஓட்டிய ரேபிடோ ஓட்டுநர்.! அலறிய பயணி மீது கொடூர தாக்கல்- ஷாக் கொடுத்த போலீஸ்

சுட்டுப்பிடித்த போலீஸ்

அப்போது காவலர் மலையரசனிடம் இருந்து பணத்தை பறிக்க ஆட்டோ ஓட்டுநர் முயன்றுள்ளார். இதில் இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவலரை தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் உயிரிழந்த மலையரனின் உடலை எரித்து விட்டு ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரன் தூக்கி வீசி சென்றதாக விசாரணையில் தெரிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

vuukle one pixel image
click me!