கழிவறையில் மோடி, அண்ணாமலை படம்! திமுகவுக்கு பாஜக தரமான பதிலடி!

BJP Vs DMK: திமுகவினரின் செயலுக்கு பதிலடியாக, தமிழக கழிவறைகளில் மோடி, அண்ணாமலை படம் ஒட்டப்பட்டுள்ளது. இது திமுகவின் ஊழல் சிந்தனைகளை சுத்தம் செய்யும் என பாஜக தெரிவித்துள்ளது.

PM Modi Annamalai picture in toilet! BJP response to DMK tvk

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திமுகவினரின் கழிவறை அரசியலுக்கும், அருவருப்பான ஆபாச சிந்தனைக்கும், தாலியை அறுத்து ஊழல் செய்யும் திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கும் தமிழக கழிவறைகளில் திமுக வினரால் ஒட்டப்பட்டுள்ள மோடி, அண்ணாமலை படம் முற்றுப்புள்ளிவைக்கும்.

கழிவறையாக மாறி உள்ள ஊழல் திமுகவினரின் சிந்தனைகளை சுத்தம் செய்யும் வலிமை வாய்ந்தது பிரதமர் மோடி மக்கள் தலைவர் அண்ணாமலை படங்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் விரைவில் உணர்வார். 2026 சட்டமன்றத் தேர்தல் திமுக அரசின் ஊழலுக்கும் பிரிவினைவாதம் அரசியலுக்கு முடிவுரை எழுதும். பிரதமர் மோடி, அண்ணாமலை படத்தை கழிவறையில் ஒட்டி ஆபாச அருவருப்பு அரசியல் செய்து, தன் தலையில் தானே மண்ணை கொட்டிக்கொண்டு திமுகவினர் செய்யும் ஆபாச சுய இன்ப அரசியல் கீழ்த்தரமானது. திமுகவினரின் பிற்போக்குத்தனமான பிளாக் மெயில், வாழாவெட்டி அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது.

Latest Videos

இதையும் படிங்க: ஓபிஎஸ், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க எந்த திட்டமும் இல்லை.! அடித்துக் கூறும் எடப்பாடி

தமிழர்தம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் உள்ள  அன்பு கருவறையில் பிரதமர் மோடியும் அண்ணாமலையும் குடிகொண்டுள்ளனர். பிரதமர் மோடி, அண்ணாமலையின் அன்பும், பாசமும், வீரமும் விவேகமும், நாட்டுப்பற்றும் உணர்வுடன் பேசப்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் விழிப்படைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் வீட்டு குப்பைத் தொட்டியில் திமுகவின் அழிவு அரசியல் சென்று கொண்டிருக்கிறது என்பதை தயவு செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை  அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுக்க ஜனநாயக வழியில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தை திமுக அரசு காவல்துறையை கொண்டு,  சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு அராஜக வழியில், அடக்க முயற்சித்து தோற்றுவிட்டது.  டாஸ்மாக் ஊழலை தட்டி கேட்ட பாஜகவினரை, கொடுமைப்படுத்தும் காவல்துறையை கண்டித்து, காவல்துறையின் பொறுப்பு அமைச்சராக உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை கண்டித்து தமிழகம் முழுக்க பெண்களின் தாலியை அறுக்கும் டாஸ்மாக் கடைகளின் வாசலில் முதல்வரின் படத்தை ஒட்டும் போராட்டத்தை மகளிர் அணியினர் நடத்தினார்கள்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் கொடுமைக்கார ஆங்கிலேய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியது போல், மக்கள் விரோத, தீய சக்தி திமுக  ஆட்சியின் அவலங்களை தட்டி கேட்டு,  தாலியை அறுக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை கண்டித்து, காவல்துறையின் மிரட்டலுக்கு பயப்படாமல் கடந்த ஒரு வார காலமாக பாஜக மகளிர் அணியினர் டாஸ்மாக் கடைகளின் முன்பு முதல்வரின் படத்தை ஆணி அடித்து மாட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் இதுவரை தமிழக முழுவதும் சுமார் 100 க்கும் மேற்பட்ட வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இதில் பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஏறத்தாழ 200 பேர் போராட்ட களத்தில் கைது செய்யப்பட்டு பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50 க்கும் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்து போராட்டத்தை ஈடுபட்டவர்கள், ஈடுபட்ட திட்டமிட்டவர்களை காவல்துறை  தேடி வருகிறது.  வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டி வருகிறது. 

காவல்துறையின் கடும் கெடுபிடிகளால் மனம் தளராமல் ஊழலை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். டாஸ்மார்க் கடைகளில் முதல்வர் படத்தை மாட்டுவோம் என்று முழுக்கத்தோடு செயல்படுகிறவர்கள் தற்பொழுது தலைமுறைவாக  வாழும் பயங்கர சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். துணிவுடன் போராடியவர்கள் நீதிமன்றங்களில் முன்ஜாமின் வாங்க வழக்கறிஞர்கள் மூலம்  முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தமிழர்கள், தமிழ் சகோதரிகள், தமிழகம் நலன் காக்க போராட்டத்தை கைவிடாமல் பாஜகவின் பெண் தாமரை சிங்கங்கள் துணிவுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

திமுக அரசு எத்தனை அடக்குமுறை செய்தாலும், காவல்துறை மூலம் மிரட்டல் விடுத்தாலும், தேடுதல் வேட்டை நடத்தினாலும், கைது செய்தாலும் அஞ்சாமல் போராடி,  தீய சக்தி திமுக ஆட்சிக்கு முடிவு கட்டிய தீருவோம், மக்கள் விரோத ஊழல் திமுக கட்சியை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்போம் என்ற உறுதியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கட்டளையின்படி பாஜக மகளிர் அணியினர் போராட்டத்தை தொடர்ந்து துணிவுடன் நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, ஊழல் செய்பவர்களை காக்கும் அரசாக, கொலை கொள்ளை செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாக, போதை  வியாபாரிகளின் சந்தையாக தமிழகம் மாறியதை பற்றி கவலைப்படாமல், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பெண்கள் தொடர் பாலியல் திட்டங்களால் பாதிக்கப்படுவதை தடுக்காமல், ஊழலை தட்டி கேட்கும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை ஆயிர கணக்கில் விரட்டி விரட்டி கைது செய்வது தான் ஜனநாயகமா?

தமிழகத்திற்கு பல லட்சம் கோடி திட்டங்களை அளித்து தமிழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் பிரதமர் மோடி மோடி, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு குரல் கொடுத்து, விவசாயிகளுக்கு அரணாக நின்று, மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு அரசியல் சேவை செய்யும் அண்ணாமலை புகைப்படத்தை ஆண்கள் கழிவறையில் ஒட்டி  கேவலப்படுத்துவது தான் பேரறிஞர் அண்ணா உங்களுக்கு கற்றுக் கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அரசியலா? தமிழகத்தில் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியவில்லை என்று மிகுந்த துயரத்தில், வருத்தத்தில் தூய்மையான அரசியல் பண்பாட்டு நாயகனாக, தனக்குத்தானே தண்டனை அளித்துக் கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொள்ளும் படத்தை டாஸ்மாக்கில் ஒட்டியதன் மூலம், ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை மறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்திய கழிவறை அரசியல் நாடகம், இந்தியா முழுவதும் திமுகவின் அருவருப்பு அரசியலை அடையாளம் காட்டிவிட்டது.

இதையும் படிங்க: தமிழகத்தை வஞ்சிப்பவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பா? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக ஆக்ஷனில் இறங்கும் அண்ணாமலை!

வெகு விரைவில் சென்னை மாநகராட்சி கழிவறை காண்ட்ராக்ட் ஊழல் வெளிச்சத்திற்கு வரவுள்ளது. கழிவறையாக மாறி உள்ள ஊழல் திமுகவினரின் சிந்தனைகளை சுத்தம் செய்யக்கூடிய தலைவராக  அண்ணாமலை செயல்பட்டு வருகிறார் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். தமிழகத்தின் அரசியல் கழிவுகளை அகற்றக் கூடிய அற்புத தூய்மை நாயகனாக 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என தெரிவித்துள்ளார். 

vuukle one pixel image
click me!