கள்ளக்குறிச்சியில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் அவர்களின் நிலைமை என்ன?
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் நிச்சயதார்த்தத்திற்காக காஞ்சிபுரத்திற்கு வேனில் சென்றுக்கொண்டிருந்தனர். வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சிறுத்தனூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டயர் வெடித்து சாலை தடுப்புச்சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி! செல்போனுக்கு சார்ஜ் போட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு! நடந்தது என்ன?
இந்த விபத்தில் சென்ற 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டனர். இதனையடுத்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்தவர்களை முணடியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: இன்று இந்த 8 மாவட்டங்களும் கனமழையால் அலறப்போகுதாம்! வானிலை மையம் கொடுக்கும் வார்னிங்!
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது போக்குவரத்து போலீசார் மாற்று வழித்தடத்தில் வாகனங்களை திருப்பி அனுப்பினர். நிச்சயதார்த்தத்திற்கு சென்றவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.