கோவையில் நேரு கல்லூரியில் சீனியர் மாணவர் ஒருவர் ஜூனியர் மாணவர்களால் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Coimbatore college assault : கல்வி தான் மாணவர்களை சிறந்தவர்களாக உயர்த்தும். அந்த வகையில் கல்லூரி படிப்பே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். இந்த நிலையில் கல்லூரி ஒன்றில் சீனியர் மாணவர் ஒருவரை ஜூனியர் மாணவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர்பகுதியில் இயங்கி வரும் நேரு கல்லூரி, இந்த கல்லூரியில் சீனியர் எம்.ஏ கிரிமினாலஜி படிக்கும் மாணவரை அதே கல்லூரியில் பி இ மற்றும் பி டெக் படிக்கக்கூடிய 13 முதலாமாண்டு மாணவர்கள் தாக்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனியர் மாணவரை தாக்கிய ஜூனியர் மாணவர்கள்
அந்த வீடியோவில், சீனியர் மாணவர் ஒருவரை மேல் சட்டை இல்லாமல், மண்டியிட வைத்தும் தாக்கியுள்ளனர். மேலும் கைகளை மேலே தூக்க சொல்லியும் ஜூனியர் மாணவர்கள், சீனியர் மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். சீனியர் மாணவர் அழுது கெஞ்சியும் இரவு முழுவதும் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ வெளியான நிலையில் கல்லூரி நிர்வாகம் தரப்பில் 13 மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்,
மாணவரை தாக்கியது ஏன்.?
மேலும் நாளைய தினம் பெற்றோர்களை நேரில் வரவழைத்து அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப் போவதாகவும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இதனிடையே சீனியர் மாணவரை ஜூனியர் மாணவர்கள் தாக்கியது ஏன் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி ஜூனியர் மாணவர்களின் அறையில் இருந்த பணத்தை சீனியர் மாணவர் எடுத்ததாக கூறி சந்தேகிக்கப்பட்டு சீனியர் மாணவரை தாக்கி இருக்கின்றனர்