சென்னையில் அதிர்ச்சி! செல்போனுக்கு சார்ஜ் போட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு! நடந்தது என்ன?

Published : Mar 23, 2025, 01:06 PM ISTUpdated : Mar 23, 2025, 01:10 PM IST
 சென்னையில் அதிர்ச்சி! செல்போனுக்கு சார்ஜ் போட்ட  பள்ளி மாணவி உயிரிழப்பு! நடந்தது என்ன?

சுருக்கம்

சென்னை எண்ணூரில் ஈர கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 9ம் வகுப்பு மாணவி அனிதா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இரவு நேரத்தில் செல்போன்களை பயன்படுத்திவிட்டு உறங்கும் போது படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு உறங்குவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், செல்போன் வெடித்து விபத்து நிகழ்கிறது. அதேபோல் ஜார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசும் போது வெடித்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அவ்வப்போது ஏற்படுகிறது. இந்நிலையில் ஈரக் கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர் அனிதா(14). பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவி ஈரக் கையோடு செல்போனுக்கு சார்ஜ் போட முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. அலறிய படி மயங்கிய அனிதா மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் அனிதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் முதன்முறையாக! பெண் தலைமையின் கீழ்! புதிய லோகோவை வெளியிட்ட அமைச்சர்!

அங்கு அனிதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரக் கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டதால், மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டேட்டா திருடும் ஏர்டெல்..! 100mbps க்கு வெறும் 40 தான் கிடைக்குது.. சென்னையில் ஷோரூம் முன்பு போராட்டம்..
தினமும் 20 மாத்திரைகள் சாப்பிடுகிறேன்! உருக்கமாக பேசிய நடிகை மீரா மிதுன்! அதிரடி காட்டிய கோர்ட்!