ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், இந்தியா 118-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் இந்தியாவை விட முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் தேதி உலக மகிழ்ச்சி தினம் (World Happiness Day) கொண்டாடப்படுகிறது. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் 147 நாடுகளில் 3 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள் அடிப்படையில் தரவுகள் தயாரிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வெல்பீயீங் ரிசர்ச் சார்பில் உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.80,000 கோடி; பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட் - சிந்து நதியில் கிடைத்த தங்கம்
அதன்படி பின்லாந்து தொடர்ந்து எட்டாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. கடுமையான உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மீண்டும் கடைசி இடத்தை அதாவது 147வது இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படிங்க: இரண்டு நாட்கள் விடுமுறை! மாணவர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் போக்குவரத்துறை கொடுத்த இன்ப அதிர்ச்சி!
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தாலும், மகிழ்ச்சியில் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பதை பார்ப்போம். கடந்த ஆண்டு 126-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு கொஞ்சம் முன்னேறி இந்த பட்டியலில் 118-வது இடம் பிடித்துள்ளது. மகிழ்ச்சியான 20 நாடுகளில் உலகின் பெரிய நாடான அமெரிக்கா இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் முறையே 24, 23 மற்றும் 33-வது இடங்களைப் பிடித்தன. குறிப்பாக இந்தியாவை காட்டிலும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 109ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.