சென்னையில் ரவுடி ஹைகோர்ட் மகாராஜா போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். தப்பி ஓட முயன்றபோது, தற்காப்புக்காக காலில் சுடப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் சட்டம், ஓழுங்கு சரியில்லை என்று விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் குற்றம் சம்பவங்களை கட்டப்படுத்தும் விதமாகவும், ரவுடிகைள எச்சரிக்கும் வகையில் குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பிரபல ரவுடியை கிண்டி அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 15,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு! நடந்தது என்ன?
கடந்த வாரம் சென்னை ஆதம்பாக்கம், வேளச்சேரி அருகே ஒரு ரவுடி கும்பல், நகைக்கடை அதிபரின் மகனை கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டிருந்தது. இதுகுறித்து தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை சினிமா பாணியில் விரட்டி சென்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகாராஜா தான் இந்த முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் பிரபல ரவுடியும், கூலிப்படை கும்பலின் தலைவனுமான ஐகோர்ட் மகாராஜாவை தூத்துக்குடியில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்! ரயிலை கவிழ்க்க சதி! பல உயிர்களை காப்பாற்றிய லோகோ பைலட்! நடந்தது என்ன?
இதனையடுத்து போலீசார் தற்காப்புக்காக ரவுடியின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி ஐகோர்ட்டு மகாராஜா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.