சென்னையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் 'திடீர்' நிறுத்தம்

சென்னையில் பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் மின் வயரில் ஏற்பட்ட தீப்பொறியால் நிறுத்தப்பட்டது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் 80% முடிந்த நிலையில், சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Chennai Metro Rail trial run stopped sgb

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று பூந்தமல்லி முதல் முல்லைத்தோட்டம் வரை 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்பட இருந்தது. ஆனால், சோதனை ஓட்டம் தொடங்குவதற்கு முன்பாக மின் வயரில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக, நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  

சிரமத்தைக் குறைக்கும் மெட்ரோ:

Latest Videos

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ சேவையின் முதல் கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் ஆகிய இரண்டு வழித்தடங்களில் பயணிகள் சேவை தொடங்கப்பட்டது. தற்போது, தினமும் சுமார் 3.1 லட்சம் பயணிகள் மெட்ரோவை பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்கா, சவுதி அரேபியா, குவைத், கத்தார்... இந்தியாவிற்கு அதிக பணம் எங்கிருந்து வருகிறது?

இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள்:

இப்போது, மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 118.9 கிமீ நீளத்துடன், 128 நிலையங்களைக் கொண்ட இந்த திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு, இதுவரை சுமார் 80% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.  

இதில், பூந்தமல்லி பைபாஸ் முதல் கலங்கரை விளக்கம் வரை தண்டவாள அமைக்கும் பணிகள் நடைபெற்று, அதிலிருந்து 2.5 கிமீ தூரத்திற்கு (பூந்தமல்லி முதல் முல்லைத்தோட்டம்) தண்டவாள அமைப்பு முழுமையாக முடிக்கப்பட்டது. இதையடுத்து, இங்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் திட்டமிடப்பட்டது.  

சோதனை ஓட்டம் ஒத்திவைப்பு:

இன்று மாலை 5 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் முன்பாக, தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் தண்டவாளம், மின் இணைப்பு, சென்சார்கள் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்தனர். ஆனால், மாலை 6 மணியாகியும் சோதனை தொடங்கப்படவில்லை.  

"மின்வயரில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தீப்பொறி எழுந்தது. இதனால், முதல் கட்ட சோதனை ஓட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தப்படும்," என அதிகாரிகள் கூறினர்.  அடுத்த 3 மணி நேரத்தில் பிரச்சினை சரிசெய்யப்பட்டதும் சோதனை ஓட்டம் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

உங்களை லட்சாதிபதியாக மாற்றும் எஸ்.பி.ஐ. திட்டம்! முதலீடு செய்வது எப்படி?

vuukle one pixel image
click me!