TN Rain Alert: தமிழகத்தில் பிப்ரவரி முதல் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த முறை பிப்ரவரி மாதத்தில் இருந்து கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஆகையால் இந்த முறை கோடை வெயில் எப்படி இருக்குமோ என்ற பயத்தில் பொதுமக்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் மார்ச் தொடங்கியதில் இருந்து கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதேபோல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதையும் படிங்க: இன்று இந்த 8 மாவட்டங்களும் கனமழையால் அலறப்போகுதாம்! வானிலை மையம் கொடுக்கும் வார்னிங்!
இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை கணித்தது. அதன்படி தஞ்சையில் இரண்டாவது நாளாக பல்வேறு பகுதிகளில் கனமழையும், நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி! செல்போனுக்கு சார்ஜ் போட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு! நடந்தது என்ன?
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது 7 மணிவரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி , சென்னை, , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நீலகிரி , கன்னியாகுமரி , கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.