பிரதமர் வாகனத்தில் பூ உடன் சேர்ந்து விழுந்த செல்போனால் பரபரப்பு.. பின்னர் நடந்தது என்ன?

By Ramya sFirst Published Feb 28, 2024, 7:45 AM IST
Highlights

2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ள நிலையில், நேற்று பிரதமர் சென்ற வாகனத்தில் பூ உடன் சேர்ந்து செல்போன் ஒன்று வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் பகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக நிகழ்ச்சி நடைபெறும் திடலுக்கு திறந்த வெளி வாகனத்தில் பிரதமர் மோடி சென்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் என மூவரும் பிரதமருடன் இருந்தனர்.

என் மண் என் மக்கள்.. பல்லடம் வந்த பிரதமர்.. வழங்கப்பட்ட 67 கிலோ மாலை - மோடியை கொண்டாடிய கொங்கு மண்டலம்!

Latest Videos

அப்போது பிரதமரை வரவேற்கும் விதமாக பாஜக தொண்டர்கள் பூக்களை தூவி உற்சாகம் வரவேற்றனர். அப்போது பூ உடன் செல்போன் ஒன்று பிரதமர் சென்ற வாகனத்தின் மீது வந்து விழுந்தது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பதறினர். இதனை கவனித்த பிரதமர் மோடி செல்போனை எடுத்து கொடுக்க சொல்லி சைகை காட்டினார்.

.

அதன் பின்னர் செல்போனை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் பாஜக தொண்டர்கள் பூக்களை தூவி பிரதமரை வரவேற்கும் போது அருகில் செல்போனில் படமெடுத்த தொண்டரின் செல்போனை எதிர்பாராத விதமாக தட்டி விட்டதால் செல்போன் தவறி விழுந்து தெரியவந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த மோடி.. திடீர்னு வண்டியை நிறுத்தி.. பிரதமர் பார்த்த பிரபலம் இவரா..!

மேலும் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க பாஜகவினர் முன்னதாக பூக்களை தூவும் போது செல்போன் போன்ற எந்த பொருளையும் கையில் வைக்க வேண்டாம் என பல முறை ஒலிபெருக்கி மூலம் அறிவித்தும் இந்த அரங்கேறி உள்ளது. விசாரணையில் செல்போன் தவறி விழுந்ததாக தெரியவந்ததை தொடர்ந்து செல்போன் பாஜக தொண்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

click me!