என் மண் என் மக்கள்.. பல்லடம் வந்த பிரதமர்.. வழங்கப்பட்ட 67 கிலோ மாலை - மோடியை கொண்டாடிய கொங்கு மண்டலம்!
En Mann En Makkal : இன்று என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா, பல்லடம் பகுதியில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது, இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
Modi in Palladam
இன்று பல்லடத்தில் பிரதமர் மோடி பேசுகையில், விழா மேடையில் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசில் கொங்கு மண்டலத்தின் அபரிமிதமான அன்பை அவர் பெற்றுள்ளார் என்பது தெரிகின்றது என்றே கூறலாம்.
மஞ்சள் வாரியம் அமைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஈரோட்டைச் சேர்ந்த மக்கள் பிரதமருக்கு 67 கிலோ எடை கொண்ட மஞ்சள் மாலை ஒன்றை பரிசாக வழங்கினர். ஈரோடு பகுதி மஞ்சள் சாகுபடிக்கு பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வாரியத்தை அமைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முடிவு ஏற்றுமதியை அதிகரிக்கும் என அங்கிருந்து வரும் விவசாயிகள் கருதுகின்றனர்.
PM Modi Shalvai
பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு பிரதமர் முக்கியத்துவம் அளித்ததால், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீலகிரியில் இருந்து தோடா பழங்குடியின சமூகத்தின் கையால் செய்யப்பட்ட சால்வை பிரதமருக்கு வழங்கப்பட்டது. இதனால் சால்வை விற்பனை கணிசமாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.
PM modi and Annamalai
அதேபோல ஜல்லிக்கட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஜல்லிக்கட்டு காளையின் சிலை ஒன்றும் பிரதமருக்கு வழங்கப்பட்டது. திமுகவும் கூட்டணியாக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் காங்கிரஸால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு மீட்டெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.