ஒரே ஒரு அரசாணை…! மக்களை கொண்டாட வைத்த முதல்வர் ஸ்டாலின்…!

By manimegalai aFirst Published Oct 19, 2021, 8:49 AM IST
Highlights

பட்டா பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

சென்னை: பட்டா பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

பட்டா என்றால் நம்மில் பலருக்கு பட்டதுபோதும் என்ற எண்ணங்கள் வரும். காரணம் அந்தளவுக்கு பட்டா பெற அலையோ, அலை என அலைந்திருப்போம். இப்போது அனைத்தும் டிஜிட்டல்மயமாகிவிட்டாலும் பட்டா பிரச்னை மட்டும் தீராமல் தொடர்ந்து இருப்பதாக புகார்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு கொண்டே வந்தன.

இந்நிலையில் விவசாயிகள், வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பட்டா பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு ஒரு முக்கிய அரசாணையை வெளியிட்டு உள்ளது.

அதாவது பட்டா பிரச்னைகளுக்கு கிராம அளவில் சிறப்பு முகாம்களை நடத்துவது என்பதாகும். இந்த அரசாணையின் மூலம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அனைத்து வருவாய் வட்டாரங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் பட்டா பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து கொள்ளலாம்.

இந்த முகாம்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும், கண்காணிக்கும் பணியிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட வேண்டும். சிறப்பு முகாம்கள் மூலம் பட்டா பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று தமிழக அரசு கூறி உள்ளது.

click me!