மாணவர்கள் குஷியோ குஷி..! ரூ.48 கோடிக்கான கல்விக்கட்டணத்தை ஏற்றுக்கொண்டார் பாரிவேந்தர்..!

By thenmozhi gFirst Published Nov 24, 2018, 6:45 PM IST
Highlights

SRM கல்வி குழுமத்தில் படிக்கும் புயல் பாதித்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இனி கல்விக்கான கட்டணம் வசூலிக்கப்படாது என குழுமத் தலைவர் பாரிவேந்தர் அறிவித்து உள்ளார்.
 

 SRM கல்வி குழுமத்தில் படிக்கும் புயல் பாதித்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இனி கல்விக்கான கட்டணம் வசூலிக்கப்படாது என குழுமத் தலைவர் பாரிவேந்தர் அறிவித்து உள்ளார்.

எஸ்ஆர்எம் குழுமத்திற்கு சென்னையில் மட்டுமே பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளது. இந்த கல்லூரிகளில் தமிழகம் மட்டுமின்றி வட மாநிலத்தவர்கள், வெளி நாட்டினர் என பலரும் படிக்கின்றனர்.

இந்த நிலையில் சென்ற வாரம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான வேதாரண்யம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் வேரோடு உடைந்து உள்ளது. மின் கம்பங்கள் சாய்ந்து உள்ளது. தற்போது அந்த பகுதியில் வாழும் மக்கள் அவர்களின் வாழ்வாதாரமாக  விளங்கிய தென்னை மரம், வாழை மரம்..பயிர்கள் என அனைத்தையும் இழந்து வெறும் கையேடு நிற்கின்றனர்...உண்ண உணவு, குடிக்க தண்ணீர், தங்க வீடு என எதுவும் சரியாக இல்லாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண பொருட்களை பொதுமக்கள் மற்றம் தமிழக அரசு செய்து வந்தாலும், இந்த நாள் வரை பணிகள் நிறைவடையாத நிலை தான் உள்ளது. காரணம் அந்த அளவிற்கு சேதம்....பாதிப்படைந்த மக்கள் அடுத்த வேலை உணவுக்கு யோசனை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், பாதிப்படைந்த பகுதியில் இருந்து எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களிடம் கல்வித்தொகை வசூலிக்கப்பட மாட்டது என அவர் தெரிவித்து உள்ளார். இதன் மூலம் சுமார் 650 மாணவர்களின் கல்வி தடைப்படாமல் தொடரும். 

அதாவது 650  மாணவர்களின், அவர்களது  நான்கு ஆண்டு கல்வித்தொகை ரூ.48 கோடி  என்பது  குறிப்பிடத்தக்கது. அடுத்த வேலை உணவிற்கு வழியின்றி வாடும் பெற்றோர்களின் நிலையை கவனத்தில் கொண்டு மாணவர்களின் கல்வி தடைப்பட கூடாது என பாரிவேந்தர் இந்த முடிவை எடுத்து உள்ளது பாரட்டுக்குரியது.

click me!