இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்து இன்றுடன் 66 ஆண்டுகள் கடந்துள்ளது.
சுதந்திர இந்தியா:
சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த தினத்தை ஆந்திரா, கேரளா,கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. ஆங்கிலேயே அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்பும் மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்டே இன்றைய ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் இருந்தன. திரைப்படத் துறை, அரசியல் என அனைத்திற்கும் தலைநகர் சென்னையை சார்ந்தே இயங்க வேண்டிய நிலை இருந்தது.
இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
தனி மாநில கோரிக்கை:
இந்நிலையில், தெலுங்கு பேசும் மக்கள் தங்களுக்கு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தையும் அதை தொடர்ந்து போராட்டத்தையும் கையில் எடுத்தனர். இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதை தொடர்ந்து நவம்பர் 1, 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
இதையும் படிங்க..அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!
மொழிவாரி மாநிலங்கள்:
தெலுங்கு பேசும் மக்கள் (ஆந்திரா), மலையாளம் பேசும் மக்கள்(கேரளா), கன்னடம் பேசும் மக்கள் (கர்நாடகா) ஆகியோர் பிரிந்து சென்ற பின்னர் தமிழ் பேசும் மக்கள் சென்னை மாகாணத்திலே வசிக்க தொடங்கினர். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்து இன்றுடன் 66 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் இன்று கொண்டாடுகின்றன.
இதையும் படிங்க..ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு உதவி செய்யும் சென்னை இளைஞர்.. யார் இந்த ஸ்ரீராம்.?