சென்னையில் மொத்தமுள்ள 16 சுரங்கப்பாதைகள் உள்ளன. கடந்த காலங்களில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக இந்த சுரங்கப் பாதைகள் முற்றிலும் நீரில் மூழ்கிவிடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
கனமழை காரணமாக சென்னையின் பிரதான சுரங்க பாதைகளை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆதாரத்துடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
சென்னையில் மொத்தமுள்ள 16 சுரங்கப்பாதைகள் உள்ளன. கடந்த காலங்களில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக இந்த சுரங்கப் பாதைகள் முற்றிலும் நீரில் மூழ்கிவிடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் இதனை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் மொத்தமுள்ள 16 சுரங்கப்பாதைகளில் சென்னை மாநகராட்சி, 6 சுரங்கப்பாதைகளையும் நெடுஞ்சாலைத்துறை 10 சுரங்கப்பாதைகளையும் பராமரித்து வருகின்றன. சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, 153 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
undefined
மேலும், சுரங்கப்பாதைகள், நீர்வழிக் கால்வாய்கள், ஏரிகள் மற்றும் கடல் முகத்துவாரங்களில் பொருத்தப்பட்டுள்ள 68 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை இந்தக் கட்டுப்பாட்டு அறையிலுள்ள திரையின் மூலம் கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் கூட மழைநீர் தேங்காமல் வெளியேறி இருப்பதை சென்னை மாநகராட்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.