Chennai Rain: சென்னை, புறநகர் பகுதியில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை.. கடும் போக்குவரத்து நெரிசல்..!

By vinoth kumar  |  First Published Nov 1, 2022, 10:22 AM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கனமழை வௌத்து வாங்கி வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை தொடர்ந்து 4 மணிநேரத்திற்கு மேலாக விட்டு விட்டு பெய்து வந்தது. இதனால், பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை ஏற்பட்டது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மழை சிறிது நேரம் ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. கோடம்பாக்கம், தாம்பரம், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், வைதாப்பேட்டை, போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. 

அதேபோல், புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெங்களத்தூர், ஆவடி, அம்பத்தூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த காலங்களில் சென்னையில் மழை பெய்த போது சுரங்கபாதை மற்றும் சாலை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால், இந்த முறை சென்னை மாநகராட்சிஎடுத்த அதிரடியாக நடவடிக்கையால் பல்வேறு சுரங்கபாதையில் நீர் தேங்கி இல்லாமல் போக்குவரத்து செல்வதை காணப்படுகிறது. 

click me!