மு.க.அழகிரி கேட்ட ஒரே ஒரு கேள்வி..! இதை எதிர்பார்க்காத செய்தியாளர்கள்..!

By thenmozhi gFirst Published Sep 14, 2018, 3:22 PM IST
Highlights


திமுகவில் இணைய மறுக்கப்படுவதற்கான காரணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அதை ஸ்டாலினிடம் கேளுங்கள்... ஏன் சேர்க்கவில்லை என்று கேளுங்கள்... என்னை ஏன் கேட்கிறீர்கள் என்று மு.க.அழகிரி பதிலளித்துள்ளார்.

திமுகவில் இணைய மறுக்கப்படுவதற்கான காரணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அதை ஸ்டாலினிடம் கேளுங்கள்... ஏன் சேர்க்கவில்லை என்று கேளுங்கள்... என்னை ஏன் கேட்கிறீர்கள் என்று மு.க.அழகிரி பதிலளித்துள்ளார்.

திமுகவின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி, 2014 ஆம் ஆண்டில், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். திமுக தலைவர் மு.கருணாநிதி உயிரோடு இருந்தவரை மு.க.அழகிரி கட்சியில் சேர்க்கப்படவில்லை. மு.கருணாநிதி மறைந்து சில நாட்களுக்குப் பிறகு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்த வந்த அழகிரி, கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் தன்னுடன்தான் இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறி வந்தார். ஆனால், கட்சியில் தலைமையிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கருணாநிதி நினைவிடத்தை நோக்கி ஊர்வலம் ஒன்றை நடத்தினார். 

இந்த ஊர்வலத்தில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என மு.க.அழகிரி கூறியிருந்த நிலையில், அதற்கும் மிக குறைவானவர்களே ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கட்சியில் சேர்க்கப்பட்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுத்தானே ஆகவேண்டும் என்றும் 
கூறியிருந்தார்.

கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுகவுக்கு சவாலாக இருப்பேன் என்று மு.க.அழகிரி கூறி வந்தார். திமுகவில் தன்னை சேர்ப்பார்கள் என்று மு.க.அழகிரி கூறி வந்தார். தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கில்லை என்றும் மு.க.அழகிரி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மதுரையில் இன்று மு.க.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், உங்களுக்கு தொடர்ந்து திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? என்ற செய்தியாளர் கேள்விக்கு,  ஸ்டாலினைக் கேட்க வேண்டிய கேள்வி; அங்கே போய் காரணம் கேளுங்கள். அவரைக் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? இதுபோன்ற கேள்விகளை அவரை போய் கேளுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.

click me!