புதிய ரேஷன் கார்டுகளுக்கு... 'பொங்கல் பரிசு' கொடுக்கப்படுமா ? அமைச்சர் சக்கரபாணி விளக்கம் !

By Raghupati RFirst Published Jan 5, 2022, 6:41 AM IST
Highlights

தமிழகத்தில் ரேஷன் கடையில் வழங்கப்படும் ‘பொங்கல் பரிசினை’ புதிய ரேஷன் கார்டுகாரர்களும் பெற முடியமா ? என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி.

தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் விதமாக  ‘21 பொருட்கள்’ ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். பொங்கல் வைப்பதற்கு  தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றுடன் துணிப்பையும் வழங்கப்படுகிறது. 

2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 லட்சம் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் பொங்கல் சிறப்பு திட்டம் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதி எனவும் குறிப்பிட்டார்.

துப்பாக்கி தோட்ட துளைத்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு முதலமைச்சர் அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண நிதி ஒப்படைக்கப்பட்டது என்றும் ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலை சிறுவனின் தந்தை கலைச்செல்வன் பெயரில் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

click me!