வாட்ஸ்-அப்பின் புதிய வசதியால் பெரும் சிக்கல்....! இனி பொய் சொன்னால் காட்டி கொடுத்துவிடும்

First Published Oct 19, 2017, 1:45 PM IST
Highlights
new problem will create due to wats app new technique live location


வாட்ஸ்-அப்பின் புதிய வசதியால் பெரும் சிக்கல்....! இனி பொய் சொன்னால் காட்டி கொடுத்துவிடும்

வாட்ஸ் ஆப் மூலம் இனி வேறு எந்தெந்த வசதிகள் வரப்போகிறதோ என சற்று யோசிக்க  வைத்துள்ளது தற்போதைய தொழில்நுட்பம்

வாய்ஸ் கால்ஸ்,வீடியோ கால்ஸ் என பல வசதிகள் இருக்கும் தருவாயில்,தற்போது நாம் இருக்கும் இடத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக "லைவ் லொக்கேஷன்" என்ற புதிய ஆப்ஷனை  அறிமுக செய்துள்ளது.

அதெல்லாம் சரிதான். இந்து போன்ற தொழில்நுட்பத்தை  தேடப்பட்டு வரும் குற்றவாளிகளை  பிடிப்பதற்கு பயன்படுமா என யோசித்தால் நல்லா இருக்கும்.

அனைவருமே இது போன்ற சிறப்பு வசதியை பயன்படுத்தினால் பல பேர் வீட்டில் சண்டை சச்சரவுகள்  தான் ஏற்படும் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

அதாவது இதுவரை வீட்டில் சிலசில பொய்களை சொல்லி ஊர் சுற்றி வந்தவர்கள் தான் இதுபோன்ற வசதியை பயன்படுத்த தயங்குகின்றனர் என்றே கூறலாம்.

காரணம்,கணவன் மனைவி கூட சில சமயத்தில் சந்தேகம் கொள்வர்.அப்படி இருக்கும் போது எங்கோ வெளியில் சென்றாலும் திடீரென வாட்ஸ்ஆப் “லைவ் லொக்கேஷன்” ஆன் செய்ய சொன்னால்,எப்படி  இருக்கும்.கண்டிப்பாக மன நிலை பாதிக்கும்...

பின்னர், “என் மீது சந்தேகமா என்ற கேள்வி எழும்.....உண்மையாகவே நான் இங்கு தான் இருக்கிறேன் ,...அங்கு தான் இருக்கிறேன்” என சொல்லிவிட்டு,ஏதோ கோபத்தில் முடியாது...அப்படி ஒன்னும் நான்  நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை...அதாவது “லைவ் லொக்கேஷன்” ஆன் செய்து,நான் இருக்கும் இடத்தை தெரிந்துக்கொண்டால் தான் என் மீது நம்பிக்கை வரும் என்றால்....தேவையே இல்லை.... இந்த நட்பு வேண்டாம்....இந்த உறவு வேண்டாம் என.....பிரிந்து செல்லவும் வாய்ப்பு உள்ளது.

இது தான் உண்மை......காரணம் மனித வாழ்கையில் உண்மை பேசினால் சில நேரங்களில் பிரச்னை  வரும் என பலரும் பொய் சொல்லத்தான் செய்கிறார்கள்....

இப்போ இந்த சிறப்பு வசதியை பயன்படுத்துவதன் மூலம் குடும்பத்தில் கண்டிப்பாக பிரச்னை வரும் என பெரும்பாலோனோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

click me!