இலட்சக்கணக்கில் உற்பத்தி செய்ததால் தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தேசிய விருது…

First Published Oct 14, 2017, 6:35 AM IST
Highlights
National Award for Dharmapuri District Cooperative Sugar Mill


தருமபுரி

ஒரு இலட்சத்து 89 ஆயிரத்து 920 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ததால் தருமபுரி மாவட்ட கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்கு தேசிய கூட்டுறவு இணையத்தின் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவுச் சர்க்கரை ஆலை கடந்த 2016-17-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் 7690 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு, 1 இலட்சத்து 70 ஆயிரத்து 193 மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்து 11.15 சதவீத சர்க்கரை கண்டுமானத்தில் 1 இலட்சத்து 89 ஆயிரத்து 920 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளது.

இதற்காக டெல்லியிலுள்ள தேசிய கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளின் இணையம் இந்த தருபுரி மாவட்ட கூட்டுறவுச் சர்க்கரை ஆலைக்கு தேசிய விருதை கொடுத்துள்ளது.

இந்த விருதை மத்திய உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் சி.ஆர்.செளத்ரி டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். 

நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் எஸ்.ஆர்.சம்பங்கி, மேலாண்மை இயக்குநர் பி.என்.ஸ்ரீதர், துணைத் தலைமை ரசாயனர் பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில், தேசிய கூட்டுறவு இணையத்தின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சரத் பவார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

click me!