கருணாநிதி நினைவிடத்தில் ரூ. 80 லட்சத்தில் அமையவுள்ள அருங்காட்சியகத்துக்கு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7 ஆம் தேதி மரணமடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
அதன்பிறகு நடந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிட பகுதியில் 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டு, அதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க..வாரிசை சந்தித்த வாரிசு..! முதலமைச்சர் ஸ்டாலினை திடீரென சந்தித்த ஆதித்யா தாக்கரே - 2024 தேர்தல் முன்னோட்டமா.?
வங்கக்கடலில் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச்சின்னம் ரூ.81 கோடியில் அமைப்பதற்கான ஒன்றிய அரசின் அனுமதிக்காக கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதி நினைவிட வளாகத்தில் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து இதற்கான ஒப்புதலை பெற மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை குழு ஒப்புதலுக்கு அனுப்பியது.
அங்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மாநில கடலோர மண்டல மேலாண்மைக்குழுவுககு கருத்துரு பரிந்துரைக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக மாநில கடலோர மண்டல மேலாண்மைக்குழுவின் வல்லுநர் குழுவினர் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அருங்காட்சியக திட்டத்துகேகு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையும் படிங்க..இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன்..! மாணவிகளுக்கு ஸ்கூட்டர்.! திரிபுரா தேர்தல் - இலவசங்களை அள்ளி வீசிய பாஜக !!