கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசாணைக்கு தடை... உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்!!

Published : Feb 10, 2023, 07:22 PM IST
கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசாணைக்கு தடை... உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்!!

சுருக்கம்

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஜூலை மாத இறுதிக்குள் முடிவு செய்து சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் ஆட்சேபங்களைப் பெற்று, ஆசிரியர்களின் எண்ணிக்கையை இறுதி செய்து, கூடுதல் ஆசிரியர்களை, இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை அக்.15-க்குள் முடிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதையும் படிங்க: பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; காவல் ஆய்வாளர் அதிரடி நீக்கம்

அதன் அடிப்படையில், கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பான அரசாணையை கடந்த ஜன.23 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. அந்த உத்தரவில், காஞ்சிபுரத்தை சேர்ந்த மரியா அக்சிலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் அம்பிகாவேணி, சகாயராணி, மரியம்மா டெய்சி ஆகியோரை எஸ்.எஸ்.கே.வி. அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து மரியா அக்சீலியம் பள்ளி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படிங்க: இல்லத்தரசிகளே உஷார்; வாஷிங் மெஷினில் கூலாக காற்று வாங்கிய விஷ பாம்பு

இதேபோல தங்கள் பள்ளி ஆசிரியைகள் ஜெசிந்தா, அஸ்வினி, பாத்திமா ஜெயமேரி, ஏஞ்சல் சகாய ரீகா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து டாக்டர் கே.கே.நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளி தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த இரண்டு மனுக்களும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிகளின் ஆட்சேபங்களை கேட்காமல் கூடுதல் ஆசிரியர்களை இடமாற்றம் செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!