கோவையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 1750 குடும்பங்கள் பயன்பெறும் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணை வழங்குதல் மற்றும் கல்லூரி கனவு 2024 துவக்க விழா நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டங்களை துவக்கி வைத்து, நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர் முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு செயலாளர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் இந்த விழாவில் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 1750 பேருக்கு பணிநியமன ஆணை மற்றும் கல்லூரி கனவு திட்டம் துவங்குவது மகிழ்ச்சி என தெரிவித்தார்.
undefined
“மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது” பிரதமருக்கு இந்தியிலேயே பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்
தொடர்ந்து பேசுகையில், கோவை இவ்வளவு பெரிய தொழில் நகரமாக வளர்ந்து இருப்பதில் கலைஞரின் பங்கும் உண்டு. தமிழகத்தில் இருக்கும் ஓவ்வொரு மாணவனும் அவர்களது துறையில் முதல்வனாக இருக்க வேண்டும் என்பதற்க்காகதான் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. 28 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த நான் முதல்வன் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இன்று 1750 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படுகின்றது.
கோவையில் ஆஞ்சநேயர் சிலையை பார்த்ததும் யானை செய்த நெகிழ்ச்சி செயல்; வீடியோ வெளியாகி வைரல்
இதில் 1750 குடும்பங்கள் பயன் பெறும் எனவும், 2 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக பெற இருக்கின்றனர். இதில் பலன் பெறும் 98 சதவீதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஏராளமான மாணவ, மாணவிகள் பலன் அடைந்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.