விழுப்புரத்திலிருந்து மருத்துவர்களை டெபுடேஷனில் அனுப்பாதீர்கள்: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை!

By Manikanda Prabu  |  First Published Feb 29, 2024, 6:54 PM IST

விழுப்புரத்திலிருந்து மருத்துவர்களை டெபுடேஷனில் அனுப்ப வேண்டாம் என தமிழக அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்


விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ‘டெபுட்டேஷனில்’ அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்-க்கு விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுகாதார வசதியை அளித்து வரும் முக்கியமான நிறுவனம் ஆகும். இங்கே இருக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை இதனுடைய செயல்பாட்டில் கடுமையானப் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

Tap to resize

Latest Videos

undefined

தற்போது இந்த மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் தொடர்ச்சியாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தற்காலிக பணிக்காக அனுப்பப்படுகின்றனர். குறிப்பாக அனஸ்தீஸியா, ரேடியாலஜி ஆகிய துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள் அவ்வாறு அனுப்பப்படுவதால் அந்தத் துறைகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் சாதாரணமாக ‘அல்ட்ரா சவுண்ட்’ சோதனையை எடுப்பதற்குக் கூட இரண்டு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

அதுமட்டுமின்றி, அருகாமை மாவட்டங்களில் இருந்து இங்கே போஸ்ட்மார்ட்டம் கேஸ்கள் மருத்துவர்களின் சான்றளிப்புக்காக அனுப்பப்படுவதால் இங்கு உள்ள மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரித்து மருத்துவ சேவை பாதிக்கப்படுகிறது. 

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: தருமபுரம் ஆதீனம்!

எனவே, இந்த மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ‘டெபுடேஷனில்’ அனுப்புவதை நிறுத்த வேண்டுமென்றும், இந்த மருத்துவமனைக்குக் கூடுதலான மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென்றும் தங்களைப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!