அதிமுகவினரின் வாக்குகளை குறி வைக்கும் வகையில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து பிரதமர் புகழ்ந்து பேசிய நிலையில், மோடியின் பருப்பு தமிழகத்தில் வேகாது என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மந்தைவெளி எம்ஜிஆர் திடலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமானது நகரக் கழகச் செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மோடியின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது, மோடியின் உத்தரவாதம் தமிழ்நாட்டில் நடக்காது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பொன்முடிக்கு எம்எல்ஏ பதவியும் போச்சு, மந்திரி பதவியும் போச்சு. அவருடைய தொகுதியில் அதிமுகவும் வரப்போகுது. வரப்போகும் இடைத்தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதி அதிமுக கோட்டை என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். நாம் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்றார்.
அரசு மாணவர் விடுதியில் திடீரென ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; அதிகாரிகள் அலர்ட்
மேலும், இலாகா இல்லாத ஒரு அமைச்சர் சிறையில் இருக்கலாமா என்று நீதிமன்றம் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதை நம்பி செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவருக்கு மீன் வேணும்னா கிடைக்குமே தவிர, ஜாமீன் கிடைக்காது.
தமிழகத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக வளராது - அமைச்சர் ரகுபதி
அடுத்து ஐ.பெரியசாமியை சிறைக்குப் போக ரெடியா இருக்க சொல்லுங்க. அடுத்த இரண்டு மாதத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளே போகப்போறாரு. அவருக்கு பின்னர் தங்கம் தென்னரசும் உள்ள போகப்போறாரு. அடுத்ததா அதிமுகவை காட்டிக் கொடுத்த எட்டப்பன் ஓபிஎஸ் இன்னும் இரண்டே மாதத்தில் உள்ள போகப் போறாரு என்றும் சாடினார்.