போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தாலும் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் பிரச்சினை இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்து பயணிகளிடம் போதிய அளவு பேருந்துகள் இருக்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டாலும் பேருந்துகள் இயல்பு நிலையிலேயே தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எதிர்பார்த்து வந்த பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தொழிலாளர்கள் பொங்கல் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தாலும், மக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்க முதலமைச்சர் உத்தரவிட்டதின் பேரில் இயக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து
மேலும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்பொழுதும் அரசு தயாராக உள்ளதாகவும், போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்காணல் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இதற்கான அறிவிப்புகள் பத்திரிகையில் வெளியிடப்பட்டு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு திமுக ஆட்சியில் 5 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 8 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது குறித்து எடப்பாடி பழனிசாமி வாய்திறக்கவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் செய்யாமலையே 20 சதவிகிதம் போனஸை தமிழக முதலமைச்சர் வழங்கி உள்ள நிலையில் இவர்களின் கோரிக்கையையும், முதல்வர் நிறைவேற்றி தருவார்.
பொதுமக்களின் வேண்டுகோளின் படியே ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு கருணாநிதி பெயர் - அமைச்சர் தகவல்
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரமாட்டோம் என்று கூறவில்லை. அதற்கான கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம். மக்கள் விரோத, தொழிலாளர் நல விரோத அரசாக திமுக அரசு இல்லை. பொங்கல் திருநாளை சென்னையில் இருந்து சொந்த ஊர்களில் சென்று கொண்டாட வசதியாக எந்த இடையூறும் இல்லாமல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்படாத நிலையில் திமுக ஆட்சியில் 800 பேருக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. நிதி நிலைமை சரியான பிறகு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறோம் என்று அரசு கூறிய பின்பும் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் பணிக்கு வராத இடத்தில் தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.