ஒரே நாளில் 4,435 பேருக்கு கொரோனா பாதிப்பு.! பொது இடங்களில் முககவசம் கட்டாயமா.? மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்

By Ajmal Khan  |  First Published Apr 5, 2023, 11:24 AM IST

கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள முககவசம் அணிந்து கொள்ளலாம்.  ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பிற்கு முன்பு இருந்தே முக்கவசம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா பாதிப்பு பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லையென அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 50க்கும் குறைவானவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும்  4,435 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 23,091 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Latest Videos

undefined

தமிழர்களின் வாழ்வியலை கீழடி அருங்காட்சியகம் பிரதிபலிக்கிறது - அமைச்சர் பெருமிதம்

பொது இடங்களில் முககவசம்.?

தமிழகத்திலும் ஒற்றை இலக்கத்தில் இருந்து பாதிப்பு தற்போது 198 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அனைத்து மருத்துவமனையிலும் முக கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தான் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதற்காகத்தான் முக கவசம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில்  100% கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் நேரிடையாக ஆய்வு சென்ற போது பாக்க முடிவதாக தெரிவித்தார்.  தனி இடைவெளி, முக்கவசம், கை கழுவது ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிகளில் உள்ளது.

அச்சம் தேவையில்லை

பொது இடங்களில் முககவசம் கட்டாயம் இல்லை, அபராதம் விதித்து தான் முக கவசம் அணிய வேண்டிய நிலை வரவில்லை.கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள முககவசம் அணிந்து கொள்ளலாம்.  ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பிற்கு முன்பு இருந்தே முக்கவசம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா பாதிப்பு பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை. பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்களின் வழிகாட்டுதலோடு 5 நாட்கள் தங்கள் தனிமைப்படுத்திக்கொண்டால் போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய தேவையில்லையெனவும் கூறினார். மேலும் கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மருத்துவமனையில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற இருப்பாக கூறினார்.  

இதையும் படியுங்கள்

தாய் கண் முன்னே ஆற்றில் மூழ்கி இரண்டு குழந்தைகள் பரிதாபமாக பலி.! சோகத்தில் தேனி மக்கள்

click me!