BREAKING: ஷாக்கிங் நியூஸ்! சென்னையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

By vinoth kumar  |  First Published Apr 5, 2023, 11:22 AM IST

சென்னை நங்கநல்லூர், மூவசரம்பேட்டை, மடிப்பாக்கம் இம்மூன்று ஊர்களும் சேருமிடத்தில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 


சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது  5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை நங்கநல்லூர், மூவசரம்பேட்டை, மடிப்பாக்கம் இம்மூன்று ஊர்களும் சேருமிடத்தில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

Tap to resize

Latest Videos

அப்போது அர்ச்சகர்கள் ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற போது அடுத்தடுத்து அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுதொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய 5 அர்ச்சர்கள் உடலை மீட்டனர்.

இதனையடுத்து, 5 பேரின் உடல்களை மீட்டு பிரதே பரசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது  5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் பக்தர்களுக்கு இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!