சென்னையில் ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்த மாணவி விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்த மாணவி விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மூத்த மகள் மகாலட்சுமி. 19 வயதான இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவிக்கு அரிவாள் வெட்டு; ஒருதலை காதலன் கைது
இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அதில், மகாலட்சுமி 30,000 ரூபாய் வரை பணத்தை கட்டி இழந்துள்ளார். இந்த சம்பவம் அவருடைய தயார் சாந்திக்கு தெரியவந்ததை அடுத்து மகாலட்சுமியை திட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பொறியியல் அல்லாத ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்... அண்ணா பல்கலை. சூப்பர் அறிவிப்பு!!
இதனால் விரக்தியடைந்த மகாலட்சுமி நேற்று வீட்டில் உள்ள தன்னுடைய அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.