அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஹிஜாவு நிறுவனத்தில் முதலீது செய்து பணத்தை இழந்த கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பாரிமுனை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் மகாலட்சுமி. தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஹிஜாவூ நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பங்குத்தொகை கிடைக்கும் என்று எண்ணி இவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் இவரது தாயார் 1 கோடியே 85 இலட்சம் பணத்தை பெற்று கோவிந்தராஜுலு என்பவரிடம் முதலீடு செய்துள்ளார்.
ஆனால் ஹிஜாவு நிறுவனம் மோசடி செய்துவிட்டு தற்சமயம் அதன் நிர்வாகிகள் தலைமறைவாக உள்ளதால் பணம் கொடுத்தவர்கள் அதனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கல்லூரி மாணவியும், தனது நண்பர்களிடம் மூன்று லட்சம் ரூபாய் வரை வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து பணம் கேட்பதால் குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
காட்டு பகுதியில் அண்ணனை ஓட ஓட வெட்டி கொன்ற தம்பி கைது
இந்த நிலையில் கல்லூரி மாணவி மகாலட்சுமி நேற்று இரவு தனது அறையில் மின் விசிறியில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த ஹிஜாவு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு பத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று கல்லூரி மாணவியும் தூக்கிட்டு உயிரிழந்து உள்ளதை அடுத்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து, பொதுமக்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.