சென்னை மாநகராட்சியில் மார்ச் 31 ஆம் தேதி முதல் முறையாக ஒரே நாளில் 50 கோடி ரூபாய் சொத்து வரி வசூலாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மார்ச் 31 ஆம் தேதி முதல் முறையாக ஒரே நாளில் 50 கோடி ரூபாய் சொத்து வரி வசூலாகியுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சென்னை மாநகராட்சிக்கு 11.4 கோடி ரூபாய் மட்டுமே சொத்து வரி வசூல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சொத்து வரி செலுத்த கடைசி நாளான 31 ஆம் தேதி சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 52.32 கோடி ரூபாய் வசூலானது. வழக்கமாக சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் 5 கோடி ரூபாய் மட்டுமே சொத்து வரி வசூலாகும்.
இதையும் படிங்க: சென்னை மக்களே அலெர்ட்.. ரயில் சேவையில் அதிரடி மாற்றம் - முழு விபரம்
ஆனால் கடந்த 31 ஆம் தேதி ஒரே நாளில் சொத்து வரி வசூல் 50 கோடி ரூபாயைத் தாண்டியதால், ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் மொத்த வசூல் 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக அளவில் வணிக சொத்துக்கள் உள்ள ராயபுரம் மண்டலத்தில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் சொத்து வரி வசூலானது. இதேபோல் தேனாம்பேட்டை மண்டலத்தில் 9.48 கோடி ரூபாய், கோடம்பாக்கம் 4.92 கோடி ரூபாய், அடையாறு 4.36 கோடி ரூபாய், ஆலந்தூர் 3.47 கோடி ரூபாய், அம்பத்தூர் 3.29 கோடி ருபாய், அண்ணாநகர் 3.17 கோடி ரூபாய், சோழிங்கநல்லூர் 2.55 கோடி ரூபாய், பெருங்குடி 2.28 கோடி ரூபாய், வளசரவாக்கம் 2 கோடி ரூபாய் வசூலானது.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதா.? எத்தனை இடத்தில் போட்டி.? அமித்ஷாவுடன் பேசியது என்ன.? அண்ணாமலை பரபரப்பு தகவல்
வடசென்னை மண்டலங்களான தொண்டியார்பேட்டை, மாதவரம் மற்றும் மணலியில் 1 கோடிக்கும் குறைவாக வசூலாகியுள்ளது. திருவொற்றியூர் மற்றும் திரு. வி. கா. நகர் ஒரே நாளில் 1 கோடிக்கு மேல் வசூலானது. தினசரி சராசரியாக 6,000 பில்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 31 அன்று குறைந்தது 15,000 பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழில்முறை வரி வசூல் 33.64 கோடி ரூபாயைத் தொட்டது. தேனாம்பேட்டையில் தொழில் வரி வசூல் 15.66 கோடி ரூபாயாக இருந்தது. அதிகபட்சமாக, ஆலந்தூர் மண்டலத்தில் 5.15 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.