பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் 25 ஆம் தேதி வரை மாற்றம் இருக்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை சென்டிரலில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் சனிக்கிழமை முதல் வருகிற 25-ந்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மூர் மார்க்கெட் - பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10. 35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி - ஆவடி இடையே இரவு 11. 55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மிலிட்டரி - சென்னை சென்டிரல் இடையே இரவு 10. 45 மணிக்கு இயக்கப்படும். மின்சார ரெயில் ஆவடி-சென்டிரல் இடையேயும், சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11. 30 மணிக்கு இயக்கப்படும். மின்சார ரெயில் சென்டிரல்-வியாசர்பாடி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டை - சென்டிரல் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் -சென்டிரல் இடையேயும், சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே காலை 7. 30 மணிக்கு இயக்கப்படும். மின்சார ரெயில் சென்டிரல்- பேசின் பிரிட்ஜ் இடையேயும், சூலூர்பேட்டை - சென்டிரல் இடையே இரவு 9. 45 மணிக்கு இயக்கப்படும். மின்சார ரெயில் கொருக்குபேட்டை-சென்டிரல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்டிரல் - திருவள்ளூர் இடையே இரவு 11. 15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும். சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11. 45 மணி இயக்கப்படும் மின்சார ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11. 40 மணிக்கு இயக்கப்படும். சென்டிரல் - ஆவடி இடையே நள்ளிரவு 12. 15 மணி இயக்கப்படும் மின்சார ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 12. 20 மணிக்கு இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா
இதையும் படிங்க..ஏப்ரல் 4 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைக்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு