TASMAC: மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. சென்னையில் டாஸ்மாக் கடை மற்றும் பார் மூடல் - முழு விபரம்

By Raghupati R  |  First Published Mar 31, 2023, 1:10 PM IST

சென்னையில் டாஸ்மாக் கடை மற்றும் பார் ஆகியவை மூடப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


வருகின்ற மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் மதுக்கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திகுறிப்பில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

அதில், "ஏப்ரல் 4 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்பு களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும். தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க..60 பவுன் கிடையாது.. மொத்தம் 200 பவுன் காணோம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கில் புது ட்விஸ்ட்

இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ

click me!